பிரித்தானிய வீரர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பிரித்தானிய அரசு கோரிக்கை

#Ukraine #War #Russia
Prasu
2 years ago
பிரித்தானிய வீரர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பிரித்தானிய அரசு கோரிக்கை

உக்ரைனில் சிறைப்பிடிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரித்தானிய அரசின் கோரிக்கையை தான் பாஸ் பிரிவினைவாத தலைவர்கள் நிச்சயமாக கருத்து கொள்வார்கள் என ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு  ஆதரவாக போரில் களம் இறங்கிய 2 பிரித்தானிய வீரர்கள் ஷான் பின்னர் (48) மற்றும் ஐடன் அஸ்லின்(28) போன்றோர் துறைமுக நகரமான மறியலில் நடைபெற்ற சண்டையின்போது ரஷ்யப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு ரஷ்ய படைகளால்  சிறைப்பிடிக்கப்பட்ட இரண்டு பிரித்தானிய வீரர்களும் அத்துமீறிய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள் என தகவல்கள் தெரிவிக் கப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரேனின் பிரிவினைவாத பகுதிகளில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பிரித்தானியா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பிரஸ்கோ பத்திரிக்கையாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக அளித்துள்ள தகவலில் பிரித்தானிய வீரர்களின் மரணதண்டனையை முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என பிரித்தானிய அரசின் கோரிக்கைகளை உக்ரைன் பிரிவினைவாத தலைவர்கள் நிச்சயமாக கருத்தில் கொள்வார்கள் என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக பிரித்தானிய அரசு ரஷ்யாவிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தைகளும் இதுவரை ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!