அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் முக்கிய கலந்துரையாடல் இன்று !

Nila
2 years ago
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் முக்கிய கலந்துரையாடல் இன்று !

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெறவுள்ளது.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் மாலை 4.00 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதன்போது, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் உரிய அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு அனைத்து தரப்பினருடனும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதனையடுத்து, அரசியலமைப்பின் 21வது திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது அல்லது தேர்தலுக்கு செல்வது அத்தியாவசியமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!