நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை

1.5 பில்லியன் அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை திருத்துவதற்கு இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பரிமாற்ற ஏற்பாட்டிற்காக சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு போதுமான வெளிநாட்டு கையிருப்பு இருந்தால் தவிர, அதைப் பயன்படுத்த முடியாது.
இலங்கைக்கு தேவையான அளவு இருப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பரிமாற்ற ஒப்பந்தம் இலங்கைக்கு இறக்குமதிகளை செலுத்துவதற்காக கடனைப் பெற உதவுகிறது.
இந்த நிலையில், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நாணய வசதியை பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட ஷரத்தை திருத்துமாறு இலங்கை அதிகாரிகள் தற்போது சீன தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளjாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



