சஜித் எம்எஸ்சி பாஸ்: வெளியாகிய பெறுபேறு
Mayoorikka
2 years ago

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுற்றுச்சூழல் மாஸ்டர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலமான பரீட்சைக்கு தோற்றியதன் மூலம் அவர் இந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.
அவர் பரீட்சைக்குத் தோற்றிய பல படங்களும் அதற்கான ரிசல்ட் ஷீட்டும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் , சிறிலங்காவில், அரசியல்வாதியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் போதே சுற்றாடல் விஞ்ஞானத்தில் முதுமானி பட்டம் பெற்ற முதல் அரசியல் தலைவர், சஜித் பிரேமதாச எனவும் கருதப்படுகிறது.



