உலகில் அமைதியான நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கை 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Nila
2 years ago
உலகில் அமைதியான நாடுகளின் தரப்படுத்தலில்  இலங்கை 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகில் மிகவும் அமைதியான நாடுகள் தொடர்பான குறியீட்டு தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டு 103வது இடத்தில் இருந்த இலங்கை, 2022 ஆம் ஆண்டு தரப்படுத்தலின் படி 90 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கைக்கு 90 வது இடம் கிடைத்துள்ளது. குளோபல் பீஸ் இன்டெக்ஸ்( Global Peace Index) இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகள், அரசியல் ஸ்திரமின்மை, அரசியல் பயங்கரவாதம், அயல் நாடுகளுடனான உறவுகள், அகதிகள், இடம்பெயர்வுகள், உக்ரைன்-ரஷ்யா யுத்தம் ஆகிய பலவற்றை கவனத்தில் கொண்டு இம்முறை தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2022 ஆமு் ஆண்டில் உலகில் மிகவும் அமைதியான நாடுள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து, அயர்லாந்து, டென்மார்க் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகள் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.

தரப்படுத்தலில் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள 5 இடங்களில் ஆப்கானிஸ்தான், ஏமன், சிரியா,ரஷ்யா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகள் உள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு 90 நாடுகளின் முன்னேற்றங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 71 நாடுகள் பின்னடைவை சந்தித்துள்ளள. ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் 5வது ஆண்டாக உலகின் மிகவும் ஆபத்தான நாடாக இருந்து வருகிறது.

அத்துடன் உலக அமைதி குறியீட்டில் உக்ரைன் மிகப் பெரிய சரிவை பதிவு செய்துள்ளது. ரஷ்ய படையினர், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, உக்ரைன் 17 இடங்கள் கீழ் நோக்கி சென்று 153வது இடத்தில் உள்ளது.

அதேவேளை ஐஸ்லாந்து கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து உலகில் அமைதியான நாடுகளின் குறியீட்டில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

மேலும் உக்ரைன், கினியா, புர்கினா பாசோ, ரஷ்யா மற்றும் ஹைட்டி ஆகிய ஐந்து நாடுகள் உலகில் அமைதியான நாடுகளின் குறியீட்டின் அடிப்படையில் மிகவும் சீரழிவை எதிர்நோக்கியுள்ள நாடுகளாகும்.

அதேவேளை எகிப்து, சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அல்ஜீரியா நாடுகள் உலகில் அமைதியான நாடுகள் வரிசையில் முன்னேற்றமடைந்துள்ளன.

இதனிடையே உலகில் மிகவும் அமைதியான பிராந்தியமாக ஐரோப்பா குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அங்குள்ள 10 நாடுகளில் 7 நாடுகள் மிகவும் பாதுகாப்பான நாடுகள் என கூறப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு குறியீட்டு அறிக்கை மிக உயர்ந்த இடத்தில் இருந்த 8 ஐரோப்பிய நாடுகள் தற்போது முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்றன. போத்துக்கல் 6வது இடத்திலும் ஸ்லோவேனியா 7வது இடத்திலும் செக் குடியரசு 8வது இடத்திலும் உள்ளன.

சிங்கப்பூர் 9வது வது இடத்திலும் ஜப்பான் 10வது இடத்திலும் உள்ளன. சுவிஸர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் 11 மற்றும் 12 இடங்களில் உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!