அடுத்த வாரமளவில் சீனி இறக்குமதி முற்றாக நின்று போய்விடும்

Kanimoli
2 years ago
அடுத்த வாரமளவில் சீனி இறக்குமதி முற்றாக நின்று போய்விடும்

அடுத்த வாரமளவில் சீனி இறக்குமதி முற்றாக நின்று போய்விடும் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சீனி இறக்குமதி செய்யப்படுவது அடுத்த வாரத்தில் முற்றாக நின்று போய்விடும். இதன் பின்னர் பிரேசில் நாட்டில் இருந்து சீனியை இறக்குமதி செய்ய நேரிடும்.

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டங்களும் இல்லை. எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சார துண்டிப்பு மற்றும் அத்தியவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்கான எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை.

இந்தியாவும் சீனாவும் சீனி ஏற்றுமதியை முற்றாக நிறுத்தியுள்ளன. தானியங்களை ஏற்றுமதி செய்வதையும் இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவுக்கு தேவையான அளவை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால், இந்தியா ஏற்றுமதிகளை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து சீனியை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

தற்போது பிரேசில் நாட்டில் இருந்தே சீனியை இறக்குமதி செய்ய வேண்டும். பிரேசிலில் இருந்து வரும் போது நீண்டகாலம் செல்லும் என்பதுடன் விலையும் அதிகம். இவைதான் பிரச்சினை என்று நாங்கள் கூறுகிறோம்.

21 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னர் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பாக கூறினார்கள். எனினும் கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை தீர்வுகளை காணமுடியவில்லை.

பொருளாதார பிரச்சினைகளை காட்டி 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒத்திவைக்க முயற்சித்து வருகின்றனர். இதனால், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முன்னர் அரசியல் மறுசீரமைப்புகளை கொண்டு வருமாறு நாங்கள் கேட்கின்றோம் என தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!