சாம்பல் நிறப் பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் பாகிஸ்தான்

#Pakistan
Prasu
2 years ago
சாம்பல் நிறப் பட்டியலில் தொடர்ந்து  நீடிக்கும் பாகிஸ்தான்

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு 27 நிபந்தனைகளை விதித்தது. 

அதன்பின், மேலும் 7 நிபந்தனைகளை விதித்தது. மொத்தமுள்ள 34 நிபந்தனைகளில் 32 நிபந்தனைகளை தாங்கள் நிறைவேற்றிவிட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

எனவே, தங்கள் நாட்டை கிரே பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் செயல் திட்டத்தின் நிபந்தனைகளை பாகிஸ்தான் பின்பற்றத் தவறிவிட்டது. 

கடனில் மூழ்கிய பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேற முயன்ற முயற்சி தோல்வியடைந்தது. இதனால் கடந்த 3 ஆண்டாக பாகிஸ்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் உள்ளது. 

ஜூன் 2018-ல் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது. கடும் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில் சாம்பல் பட்டியல் நிலை காரணமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறுவது பாகிஸ்தானுக்கு ஏற்கனவே கடினமாக உள்ளது. 

இந்நிலையில், நான்காவது ஆண்டாக சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு தொடர்ந்து பாகிஸ்தானை சாம்பல் நிறப் பட்டியலில் வைத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!