பிரபல நாட்டில் உயர்வடைந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை

#Afghanistan
Prasu
2 years ago
பிரபல நாட்டில் உயர்வடைந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் பெண்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு தலீபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதே நேரத்தில் தலீபான் ஆட்சியில் பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இந்த தாக்குதலுக்கு பொதுமக்கள் இலக்காகி வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் ஐ.நா வெளியிட்ட அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரான் நாட்டில் இருந்து செயல்படும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் அந்நாட்டு ஊடகத்திடம் கூறியது, ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பொறுப்பேற்ற பிறகு ஈரானில் ஆப்கானிஸ்தானிய குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 20 மடங்கு உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர். 

இது பற்றி ஈரானின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான நீதி துறை துணை மந்திரி படா அகமதி கூறியது, ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் நாட்டிலிருந்து வெளியேறி ஈரானுக்கு இடம்பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மேலும் குடும்பத்தினரின் நிச்சயமற்ற சூழல் அந்த குழந்தைகள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!