எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோதல்: 6 காவல்துறை உத்தியோகத்தர்கள் காயம்
Reha
2 years ago

அத்துருகிரிய, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று (17) இரவு இடம்பெற்ற மோதலின்போது 6 காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டிருந்த வேளையில் சிலர் உள்ளே நுழைய முற்பட்டுள்ளனர். அவர்களை தடுப்பதற்கு காவல்துறையினர் முற்பட்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை அத்துருகிரிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



