கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டால் இருவாரங்கள் இலங்கை முடக்கப்படலாம்? திங்களே முடிவு!
Nila
2 years ago

கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டால் இரு வாரங்களுக்கு நாட்டை முடக்குவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்கும் திட்டம் குறித்து விவாதிக்கவில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடு முடக்கப்படுவது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் தெரியவரும் என குறிப்பிட்டார்.
இவ்வாறான விடயம் தொடர்பில் சுயமாக முடிவெடுக்க முடியாது எனவும், அமைச்சரவை கூட்டாகவே தீர்மானிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்



