4 முதல் 5 மில்லியன் இலங்கையர்களை உணவு நெருக்கடி நேரடியாகப் பாதிக்கும்- ரணில்

Prabha Praneetha
2 years ago
4 முதல் 5 மில்லியன் இலங்கையர்களை உணவு நெருக்கடி நேரடியாகப் பாதிக்கும்- ரணில்

உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியுடன் இருக்கவிடாதிருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக்கூடும் என்றாலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

உணவு நெருக்கடியை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் குழுவொன்றை நியமித்து அதில் அமைச்சர் நிமல் சிறிபால, கலாநிதி ஹர்ஷத் டி சில்வா மற்றும் ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை இணைக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!