சஜித் ஜனாதிபதியானால் நான் பிரதமராவேன் என்னை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை - திஸ்ஸ
Prathees
2 years ago

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயமாக நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என சமகி ஜன பலவேகவின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த பிரதமர் தானே என்றும், பிரதமர் பதவியைப் பெறுவதற்கான அதிகூடிய தகைமைகளை கொண்ட சமகி ஜன பலவேகவின் ஒரே நபர் தாம் என்றும் அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேனவுடன் சமகி ஜன பலவேக ஒருபோதும் கூட்டணி அமைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



