அடுத்த எரிவாயு கப்பல் தொடர்பில் நாளைய தினம் அறிவிக்க முடியும் - லிட்ரோ நிறுவனம்
Reha
2 years ago

நாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அடுத்த எரிவாயு கப்பல் தொடர்பில் நாளைய தினம் அறிவிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு நாட்களில் விரைவாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக கொண்டு வரப்பட்ட கப்பலில் உள்ள எரிவாயு, வைத்தியசாலைகள், உணவகங்கள் மற்றும் தகனசாலைகள் என்பவற்றுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.



