ஆப்கானிஸ்தானில் குருத்வாரா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற IS தீவிரவாத அமைப்பு

#Afghanistan #Attack
Prasu
2 years ago
ஆப்கானிஸ்தானில் குருத்வாரா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற IS தீவிரவாத அமைப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சீக்கியர் உள்பட 2 பேர் பலியானார்கள். 

பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குருத்வாரா மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

நபிகள் நாயகம் குறித்து பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்த தாக்குதலையடுத்து ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள், இந்துக்களுக்கு 100 இ-விசாக்களை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் இ- விசாக்கள் வழங்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!