சைக்கிளிங் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த அமெரிக்க ஜனாதிபதி
#America
#President
Prasu
2 years ago

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலாவர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லம் அருகே சைக்கிளிங் சென்றார்.
தனது மனைவி உள்ளிட்டோருடன் ஜோ பைடன் சென்றுகொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த மக்களைப் பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தினார்.
அப்போது, நிலைதடுமாறி ஜோ பைடன் கீழே விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் உடனே எழுந்த ஜோ பைடன், தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் ஜோ பைடனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எந்தவித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை என தெரிவித்துள்ளது.



