சரியாக வேலை செய்யவில்லை என்றால் அடுத்தகட்டமாக அரச அதிகாரிகளின் வீடுகளுக்கு தீ வைப்பதுதான்: விவசாய அமைச்சின் செயலாளர்

Prathees
2 years ago
சரியாக வேலை செய்யவில்லை என்றால் அடுத்தகட்டமாக அரச அதிகாரிகளின் வீடுகளுக்கு தீ வைப்பதுதான்: விவசாய அமைச்சின் செயலாளர்

அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்படாவிட்டால் அடுத்ததாக அரச அதிகாரிகளின் வீடுகளுக்கு மக்கள் தீ வைப்பார்கள் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் நாட்டுக்கான சேவையை சரியாக செய்யாவிட்டால் அரசு அதிகாரிகள் பயனற்றவர்களாகிவிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

ஜுலை முதல் ஒக்டோபர் இரண்டாம் வாரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் யால அறுவடைக்கு 20 மில்லியன் லீற்றர் டீசல் தேவைப்படுவதாகவும், இது பவுசர்களில் 3030 எனவும் விவசாய அமைச்சின் செயலாளர் கூறுகிறார்.

டீசல் பற்றாக்குறையால் அறுவடையை தாமதப்படுத்த முடியாது எனவும், டீசல் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் இராணுவத்தினர் உட்பட அனைத்து குழுக்களும் அறுவடைக்கு உதவ வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக கினிகத்தேன பிரதேச செயலகப் பிரிவில் உள்ள களுகல விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவிக் காரியாலயத்தில் இம்மாதம் 18ஆம் திகதி உணவு இல்லத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது 98% அறுவடை இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும், ஒரு ஏக்கர் நெற்பயிர் பயிரிட 20 லீற்றர் டீசல் தேவைப்படுவதாகவும், அதன்படி தற்போது பயிரிடப்படும் ஒரு மில்லியன் ஏக்கரில் அறுவடை செய்ய 20 மில்லியன் லீற்றர் டீசல் தேவைப்படுகிறது.

இந்த எரிபொருள் தேவை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

எக்காரணம் கொண்டும் எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் நெல் அறுவடைக்கு உதவுமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புஷ்பகுமார தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!