ஜனாதிபதி செயலகத்துக்கான அனைத்து நுழைவாயில்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை!
Nila
2 years ago

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் இடம்பெற்றுவரும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 73வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் 74வது பிறந்தநாள் இன்றாகும். இதனையடுத்து காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் இரண்டு நுழைவாயில்களையும் மறித்து மேடைகளை அமைத்து ஜனாதிபதிக்கு எதிராக கோசங்களை எழுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



