இலங்கையில் மின் கட்டணம் அதிகரிக்கப்படுவது தொடர்பில் மூன்று தினங்களில் இறுதி தீர்மானம் !

Nila
2 years ago
இலங்கையில்  மின் கட்டணம் அதிகரிக்கப்படுவது தொடர்பில் மூன்று தினங்களில் இறுதி தீர்மானம் !

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருப்பதால், இன்னும் இரண்டு மூன்று தினங்களில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மின்கட்டணம் திருத்தப்படவில்லை, ஆனால் 2014ஆம் ஆண்டு மின்கட்டணம் குறைக்கப்பட்டது. அதன்படி, மின் கட்டணத்தில் திருத்தம் செய்வது அவசியம்.

ஏனென்றால், உலக சந்தையில் நிலக்கரி மற்றும் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்பதை நாம் அறிவோம்.

அதுமட்டுமின்றி இங்கு ரூபாயின் மதிப்பை குறைத்து டொலர் மதிப்பும் உயர்ந்து பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது.

இதன்படி, இ.மி.ச. பாரிய நட்டத்தைச் சந்திக்கிறது. எதிர்காலத்தில் அந்த நட்டத்தை இ.மி.ச.யால் தாங்க முடியாது.

அதன்படி இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் மின் கட்டணத்தை எப்படி அதிகரிப்பது என்று முடிவு செய்வோம். அனேகமாக மின் கட்டணத்தை உயர்த்தும் முறை குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் பொதுமக்களுக்கு தெரிவிப்போம்.

30 முதல் 60 யூனிட் வரை பயன்படுத்தும் குறைந்த வருமானம் பெறுபவர்களின் மின் கட்டணத்தை அதிகரிக்காமல், அரசிடம் இருந்து மானியம் பெற்று மற்ற நுகர்வோரின் மின் கட்டணத்தை உயர்த்துவோம் என நம்புகிறோம்.”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!