தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக நாளை பதவிப் பிரமாணம்?
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
வர்த்தகர் தம்மிக்க பெரேரா சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவிப் பிரமாண நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இன்று மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர் நாளை காலை 10:00 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நரேந்திர பெர்னாண்டோ கூறியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு பதிலாக அவர் தேசிய பட்டியல் நபடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



