மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்:- மரக்கறி வர்த்தகர்கள் சங்கம்
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
அடுத்த மூன்று மாதங்களில் சந்தைக்கு மரக்கறிகள் விநியோகிக்கப்படுவது முற்றாக நின்று போய்விடும் என பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை ஆகியவற்றின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறி பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள 50 வீதமான விவசாயிகள் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால், பயிர் செய்கையில் இருந்து ஒதுங்கியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் இது குறித்து நாட்டுக்கு தெரியப்படுத்தியதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அருண சாந்த தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு பின்னர் நாட்டில் மரக்கறி தட்டுப்பாடு ஏற்படும் எனவும் மரக்கறிகளை கொள்வனவு செய்ய நீண்டவரிசைகள் ஏற்படலாம் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.



