கைகள் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்டர் போடப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

மொரட்டுமுல்ல சோபித வித்தியாலய மாவத்தையில் நேற்றிரவு வாயில் பிளாஸ்டர் பூசி, கைவிலங்கிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் யார் என முதலில் தெரியவரவில்லை எனினும் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் முகாமையாளர் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மாத்தறை, புஹுல்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய நபரே மார்புப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் தனது சேவையை முடித்துவிட்டு முச்சக்கர வண்டி சாரதியாக கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது முச்சக்கர வண்டியும் இன்று காலை பிலியந்தலை - கரடியன பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரை யாரேனும் கொன்று சடலத்தை மொரட்டுமுல்ல பிரதேசத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



