பாராளுமன்றம் இன்று காலை கூடவுள்ளது.
Prabha Praneetha
2 years ago

பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.
இன்று முதல் 24 ஆம் திகதி வரை கூடவிருப்பதுடன், 24ஆம் திகதி தவிர ஏனைய நாட்களில் மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் சிவில் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.



