வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி!

Mayoorikka
2 years ago
வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி!

வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளில் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதற்கான தற்போதைய குறைந்தபட்ச வயதாக சவூதி அரேபியாவிற்கு 25 ஆகவும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு 23 ஆகவும் ஏனைய நாடுகளுக்கு 21ஆகவும் காண்படுகிறது.
  
இந்த நிலையில், தொழிலாளர் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் வயது வரம்பை திருத்துவது குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்க நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உபகுழு ஜூன் 6ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

குறித்த உபகுழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கருத்திற்கொண்டு இலங்கைப் பெண்களை வெளிநாடுகளில் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவதற்கான ஆகக்குறைந்த வயதை 21ஆக மாற்றியமைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!