சாப்பிட சாப்பாடு இல்லையென சபையில் இருந்து வெளியேறினார் வடிவேல் சுரேஷ்
Mayoorikka
2 years ago
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.
இதன்போது சபையில் உரையாற்றிய வடிவேல் சுரேஷ்,
இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அவர்களுக்கு சாப்பிட இல்லை. எரிவாயு இல்லை, பெற்றோல் இல்லை. பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு போக முடியவில்லை. ஆக, இந்த சபையில் இருப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லையெனத் தெரிவித்த வடிவேல் சுரேஷ் எம்.பி, நான் வெளியேறுகின்றேன் எனக் கூறி சபையில் இருந்து வெளியேறிவிட்டார்.