சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் எந்தவொரு உதவியும் வரவேற்கப்பட வேண்டியது - மைத்திரிபால சிறிசேன

Kanimoli
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் எந்தவொரு உதவியும் வரவேற்கப்பட வேண்டியது - மைத்திரிபால சிறிசேன

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் எந்தவொரு உதவியும் வரவேற்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடும் நாட்டு மக்களும் மிக நெருக்கடியான நிலையை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து துறைகளும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும், பொருளாதார நெருக்கடி நிலைமை அனைத்து தரப்பினரையம் பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரம் மற்றும் டீசல் தட்டுப்பாட்டு ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தையும் பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!