எதிர்வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை
Kanimoli
2 years ago

நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் நேரம் அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 12 முதல் இரவு 10 மணிக்கு வரையான காலப்பகுதியினுள், 2 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
மற்றும், MNOXYZ ஆகிய வலயங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8.20 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு வர்த்தக, முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணிமுதல் காலை 8 மணிவரை 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படும்.




