முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள கையாண்ட யுக்தி
Kanimoli
2 years ago
நானுஓயா பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் எரிபொருளின்றி பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள யுக்தி ஒன்றை கையாண்டதை காணக்கூடியதாக இருந்தது.
தனது முச்சக்கர வண்டியின் எரிபொருள் தாங்கி மற்றும் இலக்கத் தகட்டை அகற்றி கழுத்தில் மாட்டிக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெற்றோலை தாங்கிக்கு பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.
இது தொடர்பில் சாரதியிடம் வினவியபோது, கேன்களில் எரிபொருள் நிரப்பப்படாததால் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்த முறையை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.