சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனுருத்த பண்டார விடுதலை
Prabha Praneetha
2 years ago
.jpg)
சமூக வலைத்தளங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனுருத்த பண்டாரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ், குற்றச்சாட்டை தொடர முடியாது என முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதன்படி அவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.



