இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 16 லட்சம் தொன் உணவு விரயமாகின்றது

Kanimoli
2 years ago
  இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 16 லட்சம் தொன் உணவு விரயமாகின்றது

  இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 16 லட்சம் தொன் உணவு விரயமாகுவதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை ஐக்கிய நாடுகள் உணவு விரயச் சுட்டெண் தரவுகள் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு வீட்டிலிருந்து வருடமொன்றுக்கு 76 கிலோ உணவு விரயமாகின்றதாகவும் அந்த தரவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், மாற்று உற்பத்திகளையும், புதிய உணவு இறுக்குமதிகளையும், தேடிக்கொண்டிருக்கும் போது, கிடைக்கும் உணவினை விரயமாக்காமல் பயன்படுத்தும் பொறுப்பினை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் என பொருண்மிய வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொழும்பு நகர சபையின் தரவுகளின்படி, கொழும்பில் அகற்றப்படும் திண்மக்கழிவுகளில் 64 வீதமானவை வீடுகள், உணவகங்கள் மற்றும் சந்தைகளிலிருந்து விரயமாக்கப்படுகின்ற உணவுகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் ஒவ்வொரு நாளும் இலங்கையில் சுமார் 7000 தொன் திண்மக்கழிவுகள் சேர்கின்றன. இவற்றில் 65 வீதமானவை உணவுக்கழிவுகளே என்று இன்னொரு தரவு கூறுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!