வாஷிங்டனில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிசூடு- ஏராளமானோர் படுகாயம்
#America
#GunShoot
Prasu
2 years ago

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வாஷிங்டனில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.
இதனை பலர் பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் இசை ரசிகர்கள் மீ து சரமாரியாக சுட்டான்.
இதனால் பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதில் உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பாக இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதன் தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.



