கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்-230 பேர் உயிரிழப்பு

#Death
Prasu
4 years ago
கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்-230 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.ஓரொமியா மாகாணத்தை எத்தியோவில்  இருந்து பிரித்து தனிநாடாக அறிவிப்பதை இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பு நோக்கமாக கொண்டிருக்கிறது. மேலும் இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்புகள் அவ்வப்போது பொதுமக்கள் ராணுவம் மீது கொடூரமான தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.

இந்த நிலையில் ஓரொமியா நகரில் உள்ள கிராமங்களுக்கு புகுந்த கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 230 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் காயமடைந்து இருக்கின்றனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அம்ஹரா  எனும் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4