காலிமுகத்திடல் போராட்டத்தை விமர்சித்த விமல்

காலிமுகத்திடல் போராட்டம் தற்போது வேறு பாதையில் சென்று கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையை குழப்பும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இதற்கு ஒரு உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இந்த போராட்டம் மக்கள் போராட்டமாக இருந்தபோதும், தற்போது அது பைத்தியகாரத்தனமான செயற்பாடாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்றுக்கு வரவிரும்பும் சிலரே அங்கு வந்த செல்வதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டு மாதங்களுக்கு முன்னர், காலிமுகத்திடல் போராட்ட நாள் ஒன்றில் பொலிஸ் ட்ரக் வாகனங்கள், வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.
போராட்டக்காரர்களை ட்ரக் வண்டிகளில் ஏற்றிச்செல்வதற்காகவே அவை அங்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்தநிலையில் இலங்கையில் உள்ள அமெரிக்க துாதுவர், பாதுகாப்புக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சருடன் தொடர்பு கொண்டு, காலிமுகத்திடல் போராட்டக்காரர்ளை கொண்டு செல்லவா இந்த ட்ரக் வாகனங்கள் எடுத்துவரப்பட்டது? என்று வினவியதுடன், அவ்வாறு நடந்தால், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுக்களில் இருந்து வெளியேறவேண்டியேற்படும் என்று எச்சரித்திருக்கிறார்.
இதனையடுத்து குறித்த வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.



