எரிபொருள் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் காஞ்சன விஜேயசேகர
Kanimoli
2 years ago

எரிபொருள் கப்பலுக்கான பணம் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜெசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த எரிபொருள் தொகைக்காக 34 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எரிபொருள் தரையிறக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படுவதுடன், குறித்த எரிபொருள் முன் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



