அரசியல் பாடம் கற்றவர்கள் நடந்துகொள்ளும் விதம் தொடர்பில் கவலையடைகிறேன் - ரணில்
Kanimoli
2 years ago

என்னிடம் அரசியல் பாடம் கற்றவர்கள் தற்போது நடந்துகொள்ளும் விதம் தொடர்பில் கவலையடைவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்றில் உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "என்னால் பயிற்சி வழங்கப்பட்டவர்கள் தற்போது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தெரியாமல் இருக்கிறார்கள், இதை பார்க்கும் போது எனக்கு கவலை ஏற்படுகிறது.
அத்தோடு, ஆட்சியில் இருக்கும் போது அதிகாரத்தைக் கண்டு ஓடினர், தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் ஓடுகின்றனர். இப்படி இருக்கும் போது எவ்வாறு அவர்களால் நாட்டை பொறுப்பேற்று ஆட்சி நடத்த முடியும்" எனக் குறிப்பிட்டார்.



