மசகு எண்ணை விலை வீழ்ச்சி ரணில் வெளியிட்ட அறிவிப்பு
Kanimoli
2 years ago

உலக சந்தையில் மசகு எண்ணை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
BRENT மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 5 அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் தற்போதைய புதிய விலை 109.79 டொலர்களாக பதிவாகியுள்ளது. US WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றில் விலை 5.37 டொலர்களால் வீழ்ச்சியடைந்து புதிய விலை 104.15 டொலர்களாக பதிவாகின்றது.
இதேவேளை உலக சந்தையில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விலை அதிகரிப்பு என்பது எமது கைகளில் இல்லை. உக்ரைன் யுத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.



