ரெட்ட உட்பட 7 பேர் விளக்கமறியலில்...
Prathees
2 years ago

ரெட்ட என்றழைக்கப்படும் ரதிது சேனாரத்ன, லஹிரு வீரசேகர, வசந்த முதலிகே உள்ளிட்ட சந்தேகநபர்கள் 7 பேர் எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 9 மற்றும் 10 திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் 7 பேரும் இன்று பொலிசில் சரணடைந்தனர்.
சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரெட்ட எனும் ரத்திந்து சேனாரத்ன மற்றும் லஹிரு வீரசேகர உட்பட 7 பேர் இவ்வாறு சரணந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 7 பேரும் மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



