3-ஆம் உலக போர் உண்டானால் பிரிட்டன் காணாமல் போகும் - ரஷ்ய முன்னாள் இராணுவ ஜெனரல் எச்சரிக்கை

#Russia #UnitedKingdom #War
Prasu
2 years ago
3-ஆம் உலக போர் உண்டானால் பிரிட்டன் காணாமல் போகும் - ரஷ்ய முன்னாள் இராணுவ ஜெனரல் எச்சரிக்கை

மூன்றாம் உலகப் போர் உண்டாகும் பட்சத்தில் பிரிட்டன் நாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் என்பது உறுதி என்று ரஷ்ய நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரல் எச்சரித்திருக்கிறார்.

பிரிட்டன் நாட்டில் புதிய ராணுவ தலைமைத் தளபதியான சர் பேட்ரிக் சாண்டர்ஸ் மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் ரஷ்ய நாட்டை வெல்ல வேண்டும் என்று தங்கள் படை வீரர்களிடம் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆதரவாளரான முன்னாள் ராணுவ தளபதி ஈவ்ஜெனி மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் பிரிட்டன் நாடு இல்லாமல் போய்விடும் என்று அவருக்கு புரியவில்லை என தெரிவித்திருக்கிறார். 

முற்றிலுமாக அந்நாடு அழிந்துவிடும். அப்படி இருக்கும்போது அவரும் அவரது சந்ததியும் எங்கு சென்று வாழ்வார்கள் என்று தெரியாது என கூறியிருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!