தொடரப்போகும் மின்வெட்டு - வெளியான அறிவிப்பு
Kanimoli
2 years ago
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை மீண்டும் செயற்படுத்தும் வரையில் 2 மணித்தியாலம் 30 நிமிட மின்வெட்டை தொடர்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
மேலும் கனரக எரிபொருள் எண்ணெய்/உலை எண்ணெய்க்கு செவ்வாய்க்கிழமை (21) 34 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கப்பல்களில் உள்ள எரிபொருள் புதன்கிழமை (22) இறக்கப்பட்டு மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.