இரண்டு சேவை முறைமைகளில் ஒருநாள் சேவையூடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம்!
Mayoorikka
2 years ago
இரண்டு சேவை முறைமைகளின் அடிப்படையில் ஒருநாள் சேவையூடாக வெளிநாட்டு கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டாளர் நாயகம் பந்துல ஹரிச்சந்திர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஒருநாள் சேவையை பெறுவதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாள் ஒன்றுக்கு 50 சதவீதமான பணிக்குழாமினரை கொண்டே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டாளர் நாயகம் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.