இலங்கைக்கு உதவ முன்வரும் குவாட் அமைப்பு!
Prabha Praneetha
2 years ago
குவாட் அமைப்பு இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலியாவின் பிரதிபிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சடர் மார்லெஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா இந்தியா அமெரிக்க ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பானது, தற்போது இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பாக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அவுஸ்திரேலியா இலங்கைக்கு இடையில் மிகப்பெரிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.