சேவை நீடிப்பு தொடர்பான கடிதம் பிரதமரின் செயலாளர் அறிவிப்பு
Kanimoli
2 years ago

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நந்தலால் வீரசிங்கவின் சேவை நீடிப்பு தொடர்பான கடிதம் ஏன் இதுவரை அனுப்பப்படவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் நேற்று பிரதமரின் செயலாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியுள்ளார்.
இதனையடுத்து பிரதமரின் செயலாளர் உடனடியாக பிரதமருடன் கலந்துரையாடி ஒரு மணித்தியாலத்தில் ஜனாதிபதி செயலாளருக்கு அழைப்பு மேற்கொண்டுள்ளார்..
அதற்கமைய, 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் 6 வருட காலத்திற்கு மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது



