கள்ள சந்தையில் எரிபொருள்: பஸ்களை தள்ளிக்கொண்டு பருத்தித்துறையில் போராட்டம்
Mayoorikka
2 years ago

யாழ்ப்பாணம் பருத்தித்துறை இ.போ.சபையின் (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தமது பஸ்களை, பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு தள்ளிக்கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



