மோடி கொடுத்த அழுத்தம் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ச திட்டம்

Kanimoli
2 years ago
மோடி  கொடுத்த அழுத்தம் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ச திட்டம்

இலங்கையின் மன்னாரில் உருவாக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஊடாக பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்தார் என்ற விடயம் இந்தியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த விடயத்தில் பொருளாதார சட்ட மற்றும் குற்றப் பிரிவு, யாரை விசாரணை செய்துள்ளது அல்லது யாரை விசாரணைக்கு அழைத்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்னாண்டோ வெளியிட்ட இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், டெல்லியில் வைத்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், காற்றலை மின் திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு நரேந்திர மோடி எவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயத்தில் நரேந்திர மோடி தலையிட வேண்டியதன் கட்டாயம் என்ன என கேள்வி எழுப்பியுள்ள கவுரவ் வல்லப், இது குறித்து பொருளாதார சட்டங்கள் மற்றும் குற்றப் பிரிவும் ஏனைய விசாரணை பிரிவுகளும் ஏன் விசாரணை நடத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது ஊழல் விசாரணைக்குரிய விடயம் என சுட்டிக்காட்டிய அவர், இதில் எந்த அதிகாரிகள் அல்லது அமைச்சர்களை விசாரணைக்கு அழைப்பதற்கு பொருளாதார குற்றப் பிரிவு திட்டமிட்டுள்ளது எனவும் வினவியுள்ளார்.

பொருளாதார சட்டங்கள் மற்றும் குற்றப் பிரிவு எப்போதாவது அதானி குழுமத்தைச் சேர்ந்த யாரையாவது விசாரணைக்கு அழைத்துள்ளதா அல்லது அழைப்பதற்கு திட்டமிட்டுள்ளதா எனவும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!