அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் - லிட்ரோ நிறுவனம்
Kanimoli
2 years ago

அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.
எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு கப்பல்களில் 7, 000 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டை வந்தடையவுள்ளது.
அந்த கப்பல்களில் உள்ள எரிவாயு கிடைக்கும் வரை கையிருப்பில் தற்போது எரிவாயு இல்லை .
இதனால் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக்கிப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.



