இறுதி போட்டியை தக்கவைக்கும் இலங்கை
சுற்றுலா அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று(24) ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற 4 போட்டிகளில் 3 இல் வெற்றி பெற்ற இலங்கை அணி 3க்கு 1 என்ற அடிப்படையில் தொடரை வெற்றிக்கொண்டுள்ளது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கை அணி தனது சொந்த நாட்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்றுள்ளது.
இறுதியாக 1992 இல் இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா அணியை இலங்கை தோற்கடித்திருந்தது.
இதேவேளை, அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்றைய தினம் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டிக்கு இலங்கை கிரிக்கெட் சபை ஊழியர்களும் மஞ்சள் நிறத்திலான ஆடை அணிந்து வருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா, சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்