இலங்கையில் வங்கிக் கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதங்கள் பாரியளவு உயர்வு!

Nila
2 years ago
இலங்கையில் வங்கிக் கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதங்கள் பாரியளவு உயர்வு!

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, பல வங்கிகள் கடன் அட்டைகளுக்கு 30 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் அட்டைகள் மீது விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வட்டி விகித வரம்புகளை நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி தீர்மானித்தது.

அதற்கமைய கடன் அட்டை வட்டி விகிதங்கள் 18 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகவும், பின்னர் 30 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் நாட்டில் செயற்பாட்டிலுள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,973,481 என பதிவாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!