ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள்!
Reha
2 years ago

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
முதலீடு, அபிவிருந்தி மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள உர மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது விளக்கியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரோடு, பிரான்ஸ், இத்தாலி, நோர்வே, நெதர்லாந்து, ஜேர்மன், துருக்கி, ருமேனியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்களும் இன்று ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.



