40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல் மேலும் தாமதமடையும்
Kanimoli
2 years ago

இலங்கைக்கு வரவிருந்த 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல் மேலும் தாமதமடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த தாமதத்திற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக கஞ்சன விஜேசேகர தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் கப்பலின் வருகை தாமதமடைந்துள்ளமையால் அங்கு நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.



