ரஷ்ய சரக்கு விமானம் விபத்து - நால்வர் உயிரிழப்பு

#Russia #Flight #Accident #Death
Prasu
2 years ago
ரஷ்ய சரக்கு விமானம் விபத்து - நால்வர் உயிரிழப்பு

உக்ரைன் நோக்கிச் சென்ற ரஷிய சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. ரஷியாவின் ரியாசான் நகரில் எரிபொருள் நிரப்பிக்கொணடு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறங்க முயன்றது. 

அப்போது தரையில் மோதி தீப்பிடித்தது. விமானத்தில் பயணித்த 9 பேரில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ரியாசான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பின்புறம் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானம் விழுந்ததும் வெடித்து சிதறி தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. விமானம் பயிற்சியில் இருந்தபோது என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி இன்டர்பாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆனால், விமான ஊழியர்களின் உயிரிழப்பு பற்றிய விவரங்களை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!