காபூலில் 10 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட இந்திய தூதரகம்

Prasu
2 years ago
காபூலில் 10 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட இந்திய தூதரகம்

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு கடுமையான கட்டுப்பாடுகள் குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டன. 

இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேறி டெல்லி திரும்பினார்கள். 

இந்திய தூதரகமும் மூடப்பட்டது. இதனால் 10 மாதங்களாக தூதரகம் செயல்படாமல் முடங்கியது. இந்த நிலையில் காபூலில் மீண்டும் இந்திய தூதரகம் நேற்று திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. 

இதையொட்டி இந்திய தொழில்நுட்ப குழுவினர் காபூல் சென்று உள்ளனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவிகள் திறம்பட சென்றடைவதை கண்காணிக்கவும், 

அவற்றை ஒருங்கிணைக்கவும் இந்திய தொழில் நுட்ப குழுவினர் ஆப்கானிஸ்தான் சென்று உள்ளனர். சமீபத்தில் தலிபான் மூத்த தலைவர்களை இந்திய அதிகாரிகள் சந்தித்துபேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் தொடரும் என்று குறிப்பிட்டு உள்ளனர்,

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!